×

கடும் சிரமத்திலும் நன்மைகள் இருக்கு வயல் வெளிகளுக்கு கர்ப்ப ஓட்டம் உருவாக்கும் அக்னிநட்சத்திர காலம்: சொல்கிறார்கள் புவியியல் நிபுணர்கள்

 

கோடைகாலம் என்றாலே கொளுத்தும் வெயிலின் உக்கிரமே ஒவ்வொருவர் மனதிலும் வந்து போகும். அதிலும் கோடையின் உச்சம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலம் என்றால், கூடவே ஒரு பீதியும் தொற்றிக் கொள்கிறது. இந்த காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்திரி வெயில் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்து வருகிறோம். நாம் வாழும் பூமியானது 23.5 டிகிரி சாய்வான நிலையில் சூரியனை சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைகாலம் மற்றும் குளிர்காலம் நிகழ்வதற்கு காரணமாக உள்ளது. சூரியனின் கதிர்கள் எங்கெல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் கோடைகாலம் உருவாகிறது. ஆண்டு தோறும் மார்ச் 23ம் தேதி சூரியன், பூமியின் நடுக்கோட்டிற்கு நேர் மேலிருந்து மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும். இப்படி வடக்கு நோக்கி நகரும் சூரியன், கடக ரேகைக்கு நேர் மேலே இருக்கும். அதன் பிறகு சூரியன் தெற்கு நோக்கி, அதாவது பூமியின் நடுக்கோட்ைட நோக்கி நகர ஆரம்பிக்கும். அப்போது பூமியின் நடுக்கோட்டிற்கு வடக்கே உள்ள நாடுகளில் கோடைகாலமாக இருக்கும்.

அதே நேரத்தில், நடுக்கோட்டிற்கு ெதற்கே உள்ள நாடுகளில் குளிர்காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதே குளிர்ச்சிக்கு காரணம். இதில் சூரியக்கதிர்கள் பூமியை அதிகளவில் நெருங்கி வரும் கோடைகாலத்தின் இறுதி நாட்களே அக்னி நட்சத்திர காலம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி அக்னி நட்சத்திர காலம் நம்மை அதிர வைத்தாலும், அதில் சில நன்மைகளும் இருக்கிறது என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள்.
இது குறித்து வானிலை சார்ந்த புவியியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில், பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. இந்த வகையில் நடப்பாண்டு சித்திரை 21ம் தேதி முதல் வைகாசி 14ம் தேதி வரை (மே 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை) அக்னி நட்சத்திர காலம் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன் வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்த பிளவுகளில் காய்ந்த இலைகளும், சருகுகளும் நுழைந்து விடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி மாதத்தின் பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிர்ந்து விடும். அதனையொட்டி, மழை பெய்தால் நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டு விடும். இதனை ‘கர்ப்ப ஓட்டம்’ என்று புவி மேலாண்மை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வகையில், இயற்ைகயாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கும், வயல் வளம் பெற்று விடுகிறது. இதன்படி கோடையின் கொடும் தாக்கமான அக்னி நட்சத்திர காலம், பூமிக்கு ஒரு நன்மையை கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல. எனவே, பீதிக்கு இடம் கொடுக்காமல் மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ள அறிவுரைகளை பின்பற்றி, மக்கள் அக்னி நட்சத்திர காலத்தை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு புவியியல் ஆர்வலர்கள் கூறினர்.

 

Tags :
× RELATED சென்னை வந்தார் எடப்பாடி பழனிசாமி