×

152 தொகுதிகளில் 110 இடங்கள் கிடைக்கும் மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி உறுதி? மம்தா கோட்டையில் அமித்ஷா நம்பிக்கை

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று 152 தொகுதிகளில் நடந்தது. இந்த தேர்தலில் 91.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தில் நடந்த இந்த தேர்தலில், ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட தேர்தலைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த 152 தொகுதிகளில் பாஜக 110 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மேற்குவங்க மக்கள் அச்சத்தை கைவிட்டு நம்பிக்கையின் பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளனர். பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சுமார் 92.58 சதவீத வாக்குப்பதிவு என்பது முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாம் கட்ட தேர்தலிலும் மக்கள் இதே உற்சாகத்துடன் மாற்றத்திற்காக வந்து வாக்களிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி’ என்று கூறினார்.

 

Tags : BJP ,West Bengal ,Amitsha ,Mamta Castle ,Kolkata ,Union Minister ,West Bengal Assembly elections ,West Bengal Assembly election ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு...