×

சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி மின்சார ரயில் சேவை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

 

சென்னை: சென்​னை​யில் 2வது ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த ரயிலை சென்​ட்ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்​கு​வது தொடர்​பாக​வும் ஆலோசிக்கப்​படு​கிறது. சென்னை ஐசிஎப் ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட 12 பெட்​டிகள் கொண்ட முதல் ஏசி மின்​சார ரயில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 19ம் தேதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்​கப்​பட்​டது. இந்த ரயில் சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயிலுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம், கடற்​கரை – செங்​கல்​பட்டு ஆகிய இரு மார்க்​கங்​களில் `பீக் ஹவர்​சில்’ கூடு​தல் ஏசி மின்​சார ரயில்​கள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

அதன்பேரில், கூடு​தல் மின்​சார ரயில் இயக்க ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்​திருந்​தது. ரயில்வே வாரிய​மும் தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​துக்கு ஏசி மின்​சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எப்​ நிர்வாகத்திடன் கேட்​டிருந்​தது. இதையடுத்​து, 2வது ஏசி மின்​சார ரயில் தயாரிப்பு பணி சென்னை ஐசிஎப் ஆலை​யில் கடந்த ஆண்டு தொடங்கி நடை​பெற்று வந்​தது. இப்​பணி 2 மாதம் முன்பு நிறைவடைந்​தது. இதையடுத்​து, இந்த ஏசி மின்​சார ரயிலை தெற்கு ரயில்​வே​யின் சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த ரயில், தற்​போது அண்​ணனூர் ரயில்வே யார்​டில் நிறுத்​தி, பல்​வேறு சோதனை​களுக்கு உட்​படுத்​தப்​படு​கிறது. இந்த ரயில் சென்ட்​ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​தில் இயக்கி​யும் சோதிக்​கப்​படு​கிறது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​தில் தினசரி சுமார் 200க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் தினசரி சுமார் 4 லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர். தினசரி காலை, மாலை​யில் `பீக் ஹவர்​சில்’ மின்​சார ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிகிறது. கூடு​தல் மின்​சார ரயில்​கள் மற்​றும் ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பயணி​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். அவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றும் வித​மாக, இந்த மார்க்​கத்​தில் ஏசி மின்​சார ரயில் இயக்​கு​வது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​படு​கிறது.

இது​போல, செங்​கல்​பட்டு – கடற்​கரை தடத்​தி​லும் மேலும் ஒரு ஏசி மின்​சார ரயில் இயக்​க​வும் பரிந்​துரை உள்​ளது. எனவே, எந்த மார்க்​கத்​தில் இயக்​கு​வது என்பது குறித்து முடிவு செய்​து, ஏசி மின்​சார ரயில் சேவையை விரை​வில் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 12 பெட்​டிகள் கொண்ட இந்த ரயி​லில் அமர்ந்​த​படி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்​தம்​ 4,914 பேர்​ பயணிக்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chennai Suburban ,Chennai ,Railway Administration ,Central ,Aragonam Markt ,ICF ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு...