×

அசோக் நகரில் வாக்காளரின் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்ததால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைப்பு

சென்னை: சென்னை அசோக் நகர் வாக்குச்சாவடி எண் 87ல் நேற்று வாக்குப்பதிவின் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. பிரசாந்த் என்ற வாக்காளரின் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தேர்தல் பணியாளர்களிடம் விளக்கம் கோரினார்.

இதையொட்டி அங்கு சிறிய தகராறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு அரை மணி நேரத்திற்கு மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட விவரங்களை சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Ashok ,Chennai ,Chennai Ashok Nagar polling station No. ,Prashant ,
× RELATED சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி...