×

வேலூரில் 107 டிகிரி வெயில்

சென்னை: அடுத்த இரண்டு வாரங்களில் (மே 4ம் தேதி) அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கி மே 28ம் தேதி வரை தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூரில் நேற்று 107 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூரில் 106 டிகிரி வெயில் நிலவியது. பல பகுதிகளில் 102 டிகிரி வெயில் அடித்து. இதற்கிடையே, வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு சட்டீஸ்கர் முதல் குமரிக் கடல் வரை, தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மற்றும் பலத்த காற்றுடன் நேற்று பெய்துள்ளது. இதேநிலை இன்று தொடங்கி 27ம் தேதி வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags : Vellore ,Chennai ,Agni Nakshatra ,Tamil Nadu ,Karur… ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...