×

தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கக்கோரி ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!!

டெல்லி: தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கக்கோரி ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என பிப்.2ல் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒன்றிய அரசு 6 மாதம் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், வேண்டுமென்றோ அல்லது திட்டமிட்டோ நிகழ்ந்ததல்ல. மாறாக சூழ்நிலைகளின் காரணமாகவே தாமதம் ஏற்பட்டது என்று மனுவில் ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

Tags : Supreme Court ,State of the Union ,Delhi ,Union ,South ,South Women ,
× RELATED தென்கொரியா அதிபர் இந்தியா வருகை : பிரதமர் மோடியுடன் ஆலோசனை