×

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

 

சென்னை: இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்; தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள். அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான். முக்கிய பதவிகளில் பாஜக தலைவர்களின் வாரிசுகள் உள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பல பிரச்சினைகள் உள்ளன. பாஜகவின் டபுள் இன்ஜினுக்கு எல்லா இடத்திலும் தோல்வியே கிடைத்துள்ளது. பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரே ஒரு மாநிலத்தை காட்ட முடியுமா? 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளன. திமுக அரசு கல்விக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியில் மிக திருப்தியாக உள்ளனர். காலை உணவுத் திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடும். மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவே பாஜக முயற்சி செய்தது. இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீட்டை தமிழ்நாடுதர்ன ஈர்த்துள்ளது. கடந்த முறையை விட அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

 

Tags : BJP ,India ,Arvind Kejriwal ,Chennai ,Delhi ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED மக்கள் வாக்களிக்க செல்வதை...