- சில்லி பாயிண்ட்…
- உலக செஸ் சாம்பியன்ஷிப்
- சென்னை
- FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்
- அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு
- சென்னை…
* உலக செஸ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடக்குமா?
சென்னை: ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளன. போட்டி நடைபெறும் இடம், தேதி முடிவாகவில்லை. இந்நிலையில், இப்போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கான ஒப்புதலை பெறும் முயற்சியில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎப்) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் ஓபன் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் ஜவோகிர் சிண்டாரோ ஆட உள்ளார். அதேபோல் மகளிர் பிரிவு போட்டியில் சீனாவை சேர்ந்த உலக சாம்பியன் வென்ஜுனுடன் தமிழகத்தின் வைஷாலி ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.
* சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம்
ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே, 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே இன்னிங்சின் 5வது ஓவரின்போது, ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டதை எடுத்து, மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் ஆயுஷ் மாத்ரேவின் கால் தொடை பின்புற தசையில் காயம் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் ஓரிரண்டு போட்டிகளில் அவர் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.
* அகர்கர் பதவி காலம் 2027 வரை நீட்டிப்பு
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ), மூத்த தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கரின் பதவிக் காலம் வரும் 2027ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 2027ல் நடக்கவுள்ள உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுக் குழு தலைவராக கடந்த 2023 அக்டோபரில் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டது முதல் மார்ச் 2026 வரை, இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி சாம்பியன்ஷிப்பின் 3 இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ளது. அவற்றில், டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றுள்ளது.
