- என். டி. ஏ. கூட்டணி
- முதல் அமைச்சர்
- ஓசூர்
- திமுகா
- கூட்டணி கட்சி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- திரு. திமுக
- கே. ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று ஓசூரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்பொழுது பேசிய முதலமைச்சர்; “திராவிட மாடல் 2.0ஆட்சி தொடர ஒட்டுமொத்த மக்களும் ஓகே சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை திமுகவினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என நிரூபித்துவிட்டு நிற்கிறேன்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வலிமையாக பேசிவிட்டுச் சென்றுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளதற்கு அடித்தளமாக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். ஒசூரில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட மருத்துவமனை அமைத்துள்ளோம். சிறிய தொழில் நகரமாக இருந்த ஒசூரில் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆலைகள் அமைத்துள்ளன. பாரூர் ஏரியில் கிழக்கு பிரதான கால்வாய் அமைத்து 33 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம்.
ஒசூர் தோழி விடுதி, புதிய பேருந்து நிலையம், புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளால் ஒசூர் நவீன தொழில் நகரமாக மாறி வருகிறது. ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. ஒசூரில் விமான நிலையம் அமைக்க மறுக்கும் ஒன்றிய அரசை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கிறார் எடப்பாடி. தமிழ்நாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்க துணிச்சல் இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய பாஜக அரசை தட்டிக் கேட்க துணிவில்லாத எடப்பாடி என்னை குறை கூறுகிறார்.
தோல்வி பயத்தில் அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடுகிறார் பிரதமர் மோடி. தேர்தல் பிரச்சாரத்துக்காக பேச வேண்டிய உரை எல்லாம் தேசிய கொடிக்கு பின்னால் பேசி இருக்கிறார் மோடி. மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாக அப்பட்டமான பொய் பிரச்சாரம் செய்துள்ளார் மோடி. தொகுதி மறுவரையறையை தோற்கடித்து என்.டி.ஏ. கூட்டணியை நிலைகுலைய வைத்துள்ளோம்.
காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என பழனிசாமி சொல்லிருக்காரு.. காரில் நீங்க கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிட்டு போனீங்களே.. அதுதான் கேவலம். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. ஏப்.23ம் தேதியுடன் என்.டி.ஏ. கூட்டணி அத்தியாம் முடிவுக்கு வருகிறது. பாஜகவுக்கு முகவரியே இல்லாத தமிழ்நாட்டில் என்ன நிலை ஆகப் போகுது என்று பாருங்கள்” என பேசினார்.
