×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி படகுகளில் கடலுக்குள் சென்று தேர்தல் விழிப்புணர்வு: தேர்தல் அலுவலர் பிரதாப் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் `தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா’ சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதாப் பங்கேற்று, 10க்கும் மேற்பட்ட வெளிப்புற நீர் விளையாட்டு துடுப்பு பலகையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி வைத்து, 3 விசைபடகு மற்றும் மீனவ நாட்டு படகுகளில் கடலுக்குள் சென்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மு.பிரதாப் தலைமையில், அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், பல்வேறு மீனவ சங்க பிரதிதிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு சால்வைகளை அணிவித்து, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்து. நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக, பென்னேரி வட்டம் வல்லூர் அனல் மின் நிலைய கூட்டரங்கில், தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மு.பிரதாப் தலைமையில் அதிகமான வாக்குச்சாவடி மையங்களை கொண்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை (மத்தியம்) யுவராஜ், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) அஜய் ஆனந்த், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், திருவொற்றியூர் உதவி ஆணையர் மற்றும் மண்டல அலுவலர் பத்மநாபன், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மீனவ சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pratap ,Thiruvallur ,Election Festival of Tamil Nadu Assembly General Election 2026 ,Thiruvotiyur Surai Fishing Port ,Thiruvotiyur Assembly Constituency ,District Administration ,Department of Fisheries and Fisherman Welfare ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த...