கோவை: மருதமலை கோயில் அடிவாரத்தில் பெட்டிக் கடைக்குள் கார் புகுந்த விபத்தில் கடையில் இருந்த மூதாட்டி படுகாயம். சிகிச்சை செலவை ஏற்பதாகக் கூறிய கார் உரிமையாளரான பெண், தற்போது போன் செய்தால் எடுக்க மறுப்பதாக மூதாட்டியின் மகன் புகார். மார்பு எலும்பு உடைந்துள்ளதால் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனையில் கூறியுள்ள நிலையில், போலீசாரும், நீதிமன்றத்தில்தான் முறையிட முடியும் எனத் தெரிவிப்பதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
