×

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவை ஒட்டி மே 11ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மே 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11 விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 23 பணிநாள் என்று ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா 10.05.2026 பிற்பகல் தொடங்கி 11.05.2026 பிற்பகல் வரை நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 11.05.2026 திங்கள்கிழமை அன்று ஒருநாள் மட்டும் “உள்ளூர் விடுமுறை” அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 23.05.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 11.05.2026 திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Ramanathapuram ,Eerwadi Targa Sandanakku Festival ,DISTRICT ,ERWADI TARGA SANDANAKUDU FESTIVAL ,Ruler ,Simranjeet Singh ,District Governor ,
× RELATED கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்