×

தினகரன் நாளிதழ், விஐடி இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு: எதிர்கால படிப்பு தேர்வுக்கு ஒரே இடத்தில் தீர்வு

சென்னை: திர்கால படிப்பு தேர்வுக்கு ஒரே இடத்தில் தீர்வுகாணும் வகையில் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி 2வது நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. திரளான மாணவர்கள் பெற்றோர்களுடன் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். ளஸ் 2 படிப்பை முடித்த பிறகு மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக உயர்கல்வித் தேர்வு கருதப்படுகிறது. எந்தப் படிப்பை தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியில் சேருவது, எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சிந்திக்க வைக்கும் நிலையில் உள்ளன. இத்தகைய குழப்பங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் அளிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தினகரன் நாளிதழ் சார்பில் பிரமாண்ட கல்விக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் இரண்டு நாள் மாபெரும் கல்விக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. கண்காட்சியின் 2ம் நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு ஆர்வமுடன் தகவல்களை சேகரித்தனர். கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இதில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், நர்சிங், விமான தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், கட்டிடக்கலை, ஹோட்டல் மேலாண்மை, ஊடகம், வர்த்தகம், கடல்சார் கல்வி, அழகுக்கலை, தீ மற்றும் பாதுகாப்பு, ஆடை வடிவமைப்பு, ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான படிப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், உதவித்தொகைகள் பெறும் முறைகள், சேர்க்கை நடைமுறைகள், கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அரங்கிலும் இருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன பிரதிநிதிகள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்து வழிகாட்டினர். ந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் முன்னிலை வகித்தார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் டாக்டர் ஆர். ரகு, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.எம். சுரேஷ், அமிர்தா கல்வி குழுமத் தலைவர் டாக்டர் பூமிநாதன், பி.எஸ். அப்தூர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டிட்யூட் பதிவாளர் டாக்டர் ராஜா உசேன், தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் வி.பி. ராமமூர்த்தி, ரெமோ கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ரித்திக் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், “எதிர்காலத்தில் எந்தப் பிரிவை தேர்வு செய்வது சிறந்தது என்பது குறித்து தெளிவான புரிதல் கிடைத்தது. பல்வேறு கல்லூரிகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது” என தெரிவித்தனர். லும், கண்காட்சிக்கு வந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வி பயணத்திற்கு தெளிவான திசை நிர்ணயம் வழங்கும் இந்தக் கல்விக் கண்காட்சி, ஆண்டுதோறும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாணவர்-பெற்றோர் சேர்ந்து முடிவு செய்ய ந்த கல்வி கண்காட்சி உதவியாக இருக்கும்;
விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் அளித்த பேட்டி: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் தினகரன் கல்வி மற்றும் விஐடி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் கல்விக் கண்காட்சியில் எல்லா கல்வி நிறுவனங்களின் வசதிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இன்றைக்கு எல்லாவற்றையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் இங்கு கலந்து கொண்டுள்ளன. முன்பு பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் தற்போது அது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான ஒரு ஆரோக்கியமான விவாதமாக மாறி உள்ளது.எந்த படிப்பில் சேர்ந்தால் அடுத்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆலோசிக்கிறார்கள். மாணவர்களுக்கும் சில படிப்புகளை படிக்க ஆர்வம் உள்ளதால் பெற்றோர்கள் அவர்களை தற்போது வற்புறுத்துவதில்லை. மாணவர்களுடன் சேர்ந்து முடிவு செய்வதற்கு இந்த கல்வி கண்காட்சி உதவியாக இருக்கும். அதேபோல் விஐடி கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் கற்பித்தல், படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dinakaran Daily ,VIT ,Chennai ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி...