×

தென்னை விவசாயம் ஊக்குவிக்கப்படுமா?

தேவாரம், ஏப். 19: உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வரை தென்னை விவசாயம் பண்ணைப்புரம் பகுதியில் நடந்தது.

இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த 15 வருடம் முன்பு மழை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது. கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாததால் சாகுபடி பாதிக்கப்பட்டது. வரும் பருவமழை தொடர்ந்து பெய்யும்போது தென்னை விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்க வேளாண்மைதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags : Thevaram ,Gombai ,Pannapuram ,Bodi ,Uttampalayam district ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி