×

வெள்ளக்கோவில் விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ரூ.17 லட்சத்துக்கு ஏலம்

வெள்ளக்கோவில்,ஏப்.18: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. இதில் வாணியம்பாடி, திருப்பத்தூர், கரூர், திண்டுக்கல், திருச்சி பகுதிகளை சேர்ந்த 21 விவசாயிகள் 28 ஆயிரத்து 113 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்க வந்திருந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிக பட்சமாக ரூ.67.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.65க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 55 ஆயிரத்துக்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலைச் செயலாளர் தெரிவித்தார்.

 

Tags : Vellakovil ,Vaniyambadi ,Tirupattur ,Karur ,Dindigul ,Trichy ,Kangayam ,
× RELATED மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்