- டி. ஜி புதூர்
- கோபி. கோபி
- திமுக
- யூனியன் அரசு
- கோபி?. திருக்குறள்
- ந.நல்லசிவம்
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள்
கோபி,ஏப்.17: கோபி அருகே டி.ஜி.புதூரில் திமுகவினர் ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி தொகுதி திமுக வேட்பாளர் என்.நல்லசிவத்தை ஆதரித்து நேற்று டி.ஜி.புதூர் நால்ரோட்டில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் வாரியத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முன்னதாக தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஒன்றிய அரசின் மசோதவை எரிக்கும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் ஐ.லியோனி, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், திமுக வேட்பாளர் என்.நல்லசிவம், திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் மசோதவை தீயிட்டு எரித்து ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
