×

வால்பாறையில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை: வால்பாறையில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. மலைச்சாலையில் உருண்டு விழுந்ததில் வேன் முற்றிலும் நொறுங்கியது. கேரளத்தில் இருந்து 16 பேர் பயணம் செய்த வாகனம் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கியது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Valparara ,VALPARA ,Kerala ,13th Contai Needle Rink ,Valpara-Pollachchi Road ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா வந்த வேன்...