- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- பிராப்புரை
- திண்டிகுல் திண்டிகுல்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா கூட்டணி
- திண்டுக்கல்
- கே. ஸ்டாலின்
- ஜே
- இந்தியா
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக கூட்டணியின் 7 தொகுதி வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; வெற்றிச் செய்தியோடு வெடியை போட்டுவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் தே.ஜ.கூட்டணி மண்ணை கவ்வியுள்ளது. இந்தியா முழுவதும் காவிக் கறை துடைத்தெறியப்படும்.
இனிமேலாவது தமிழ்நாட்டை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டில் சட்டம் கொண்டுவந்தால் அசால்டாக இருந்துவிடுவோம் என நினைத்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எல்லோரும் அலர்ட்டாகத்தான் இருப்போம். கருஞ்சட்டைப் படை காவிப்படையை வீழ்த்தி உள்ளது. கருப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் டெல்லியில் பாஜகவை பந்தாடிவிட்டு வந்துள்ளனர். கருப்பு, சிவப்பு படை கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை தமிழ்நாட்டிற்காக போராடும். தமிழ்நாட்டின் உரிமையை திருடி செல்ல நினைத்தார்கள். உயிரே போனாலும் தமிழ்நாடு உரிமைகளுக்காக போராட, வாதாட நான் ரெடி. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
இந்திய அளவில் இன்று ஒரு முக்கியமான நாள். மோடி, அமித்ஷா சொன்னது ஒன்று, அவர்கள் செயல்படுத்துவது ஒன்று. தொகுதி மறுவரையறை மசோதாவில் எந்த தகவல்களும் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டை மிரட்டிப் பார்த்தவர்களுக்கு தக்க பதிலடி நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளது. இந்தியா முழுக்க எல்லா எதிர்க்கட்சிகளும், மறுவரையறை மசோதாவில் அவசரம் காட்ட வேண்டாம் என்று சொன்னோம்.
தமிழர்களை படிப்பறிவற்றவர்கள் என்று பியூஷ் கோயல் இழிவாக பேசுகிறார். பிரதமர் மோடி எந்தக் கல்லூரியில் படித்தார், எங்கு பட்டம் வாங்கினார். ஒன்றிய அரசு சிறப்பாக செய்வார்கள் என்று பழனிசாமி சொன்னது நிலைப்பாடா?. எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்துவிடலாம்.
திருவள்ளுவருக்கு காவி சாயம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றில் பழனிசாமி நிலைப்பாடு என்ன?. என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சிதான் அமையும் என பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளிப்பார்களா?. பாஜக கொண்டு வந்துள்ள குற்றவியல் சட்டங்களின் பெயரை தமிழ்நாட்டில் யாராவது சொல்ல முடியுமா?. நீட் விலக்கு அளித்தால்தான் கூட்டணி என பாஜகவிடம் கூற முடியுமா?.
பெரியாரை பாஜக தலைவர்கள் அவமதிக்கிறார்களே அதற்கு உங்கள் பதில் என்ன?. தொகுதி வரையறையை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க பாஜகவிடம் பழனிசாமி கோரிக்கை வைத்தாரா?. பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்க்காத பழனிசாமி தமிழரா?. அதிமுகவின் அடிப்படையையே மறுக்கும் ஒரு கட்சியுடன் பழனிசாமி கூட்டணி வைத்துள்ளதற்கு பெயர் என்ன?” என பேசினார்.
