×

தமிழ்நாடு காகித ஆலையில் தீ தொண்டு நாள் உறுதிமொழி ஏற்பு

வேலாயுதம்பாளையம், ஏப். 17: கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் தீ தொண்டு வார விழாவையொட்டி தீ தொண்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்களின் வீர தியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு வாரவிழாவையொட்டி தீ தொண்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், முதன்மை பொதுமேலாளர் ராஜலிங்கம், முதன்மை பொதுமேலாளர் பிரின்ஸ் தொல்காப்பியன், பொதுமேலாளர் அருள்குமார், பொது மேலாளர் செல்வம், துணை பொதுமேலாளர் நாராயணன், முதன்மை மேலாளர் வெங்கடேசன், உதவி மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தீ தொண்டு வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

Tags : Fire Service Day Pledge Ceremony ,Tamil Nadu Paper Mill ,Velayudhampalayam ,Tamil Nadu Newspaper Paper Mill, Pugalur, Karur District ,Fire Service Week ,
× RELATED கிருஷ்ணராயபுரம் தொகுதியில்...