×

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சின்னம் பொருத்தும் பணி

கிருஷ்ணராயபுரம், ஏப். 17: கரூர் மாவட்டம் கிரு ஷ்ணராயபுரம்-136 (தனி) சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியானது கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய 4 தாலுக்காக்களை உள்ளடங்கியது.கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 26.03.2026ன் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 98,636. பெண் வாக்காளர்கள் 1,04,327. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 31 என மொத்தம் 2,02,994 வாக்காளர்கள் உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் 275 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வேட்பாளர்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

அதனை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் ராஜு பிரசார் ஐஏஎஸ்,. நேரில் பார்வையிட்டார்.இதில் கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், உதவி தேர்தல் நடக்கும் அலுவலர் மதியழகன், வருவாய்த் துறையினர், மண்டல வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : Krishnarayapuram ,Krishnarayapuram-136 ,Karur ,Krishnarayapuram Assembly ,Kadavur ,Manmangalam ,
× RELATED தமிழ்நாடு காகித ஆலையில் தீ தொண்டு நாள் உறுதிமொழி ஏற்பு