×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு

ஓசூர், ஏப்.17: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் ராட்சத பலூர் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை, தாலுகா ஆபீஸ் சாலை ஆகிய இடங்களில் நடன நிகழ்ச்சி மூலமும், ஒலிபெருக்கி மூலமும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சப் கலெக்டர் ஆக்ருத்தி சேத்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் நிலையத்தில் ராட்சத ஹீலியம் பலூனை பறக்க விட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Hosur ,Tamil Nadu Assembly elections ,Hosur, Krishnagiri district ,
× RELATED மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி