×

கொடுமுடியில் கலை நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு

கொடுமுடி, ஏப்.16: கொடுமுடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் முன்பு நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,“சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்குபதிவாக வேண்டும் என்பதன் நோக்கில் பொதுமக்கள், வேளாண்மை, விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவகிறது”.

நிகழ்ச்சியில் அரசு இசை பள்ளி மாணவர்களின் பாடல், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கோலம் போடப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து கலெக்டர், ஏமகவுண்டனூர் பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படுவதையும், அய்யம்பாளையத்தில் சாமியப்பன் (86) என்பவர் தபால் வாக்கு செலுத்தியதையும் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியா, தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், மாவட்ட ஊராட்சி செயலர் தனம், வட்டாட்சியர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புரோஸ், தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Kodumudi ,Kodumudi Magudeswarar Temple ,Modakkurichi Assembly ,Erode district ,District Election Officer ,Collector ,Kandasamy ,
× RELATED குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது