×

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

ஈரோடு, ஏப்.16: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஈரோடு மாநகரில் மது விற்ற, புதுக்கோட்டை மாவட்டம் மலைமேல்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி (31), பவானி சங்கரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம் (50), திருப்பூரை சேர்ந்த மலையரசு (45), கர்நாடக மாநிலம் குடகை சேர்ந்த பிரசாந்த் (29), கடம்பூர் கொட்டமலத்தை சேர்ந்த வெங்கட்டையன் (70) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, குட்கா விற்ற விஜயமங்கலம் அடுத்த மேக்கூரை சேர்ந்த ஆகஸ்டின் (42) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 7.800 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற, கடம்பூர் அடுத்த கனகுந்தூரை சேர்ந்த மாரி (67) என்பவரை கைது செய்த போலீசார், 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Erode ,Erode district ,Arokiasamy ,Malaimelkudi ,Pudukkottai district ,Bhavani… ,
× RELATED கொடுமுடியில் கலை நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு