×

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிவப்பு நிற கொன்றை மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

 

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதிகளில் கொன்றை மலர்கள் செந்நிறத்தில் பூத்துக்குலுங்குகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் ஏராளமான மயில் கொன்றை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் பூக்கள் மலர்ந்து காணப்படும். தற்போது, தெப்பக்காடு பகுதியில் சாலை ஓரங்களில் இருபுறங்களிலும் இந்த மரங்களில் அதிகளவு மலர்கள் பூத்து காணப்படுவதாலும், அவைகள் தரையில் விழுந்து காணப்படுவதும் மிகவும் அழகாக காட்சியளித்து வருகிறது.

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் இந்த மலர்கள் பூத்து காணப்படுகிறது. இப்போது முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் முதுமலை வழியாக செல்லும் வாகன உள்ளூர் மக்களும் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர். இதேபோல், இங்குள்ள குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் லைட்பாடி பகுதியை ஒட்டி உள்ள மரங்களில் அதிகளவு மலர்கள் பூத்து காணப்படுவதால், அந்தப்பகுதி மிகவும் அழகாக காட்சி அளித்து வருகிறது. எனவே, இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags : Mudumalai Tiger Reserve ,Theppakadu ,Nilgiris district ,
× RELATED தொகுதி மறுவரையறைக்கு எதிராக...