துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே லவ் கெமிஸ்ட்ரி

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற படத்தின் மென்மையான காதல் பாடலான ‘வானே வானே’ வெளியாகியுள்ளது. ரவி நெலகுதிடி எழுதி இயக்கும் இப்படத்தை எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி, இஷான் சக்சேனா இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கே.ஆர்.தரண் பாடல் எழுத, நகுல் அபயங்கர் பாடியுள்ளார். ராம் நடனப் பயிற்சி அளிக்க, அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பு பொறுப்பேற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம், துல்கர் சல்மான் நடிக்கும் 41வது படமாகும். ‘வானே வானே’ பாடல் காட்சியில் துல்கர் சல்மானுக்கும், பூஜா ஹெக்டேவுக்குமான லவ் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

Related Stories: