×

கால்பந்து பின்னணியில் 7 ஸ்டார் பாய்ஸ்

சென்னை: கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம், விரைவில் தமிழில் வெளியாகிறது. இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி எஸ் ஸ்டான்லி – ஃபைசல் லத்தீப் – ஷோனி ஸ்டீஜோ செபஸ்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார்.

Tags : Chennai ,Antony Varghese ,Nikhil Premraj ,Bigil ,I.M. Vijayan ,Faiz Siddique ,Jakes Bejoy ,
× RELATED சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்