பவனுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே

கடந்த 2025ல் தெலுங்கில் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளியான படம் ‘ஓஜி’. இப்படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகலவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் ‘ஓஜி’ படத்தின் 2ம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது.

இயக்குனர் சுஜித் சமீபத்தில் ‘ஓஜி’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய் என்றும் பூஜா ஹெக்டே அப்படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பவன் கல்யாணுடன் சேர்ந்து நடிக்க பூஜா ஹெக்டே மறுத்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

Related Stories: