×

சினி மினி நியூஸ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓம்’. நேற்று மம்மூட்டியின் 75வது பிறந்தநாளையொட்டி படக்குழு முன் அவர் கேக் வெட்டி கொண்டாடினார். தனுஷ் உள்பட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

* ஹாலிவுட்டை சேராத மிகபிரமாண்டமான பான் வேர்ல்டு படமாக ‘வாரணாசி’ உருவாகி வருகிறது. இந்திய மண் சார்ந்த கதையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல 20 மொழிகளில் அப்படம் டப்பிங் செய்யப்பட உள்ளது’ என்று தெரிவித்துள்ளார் அப்படத்தின் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா.

* நான் பள்ளியில் படிக்கும்போது கலெக்டராக வேண்டும் என்று விரும்பினேன். என் தாய், நான் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று நினைத்தார். கல்லூரி முடித்து வேலைக்கு செல்லாமல் ஒரு பையனை பார்த்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடிகை ஆக வேண்டும் என்று ஒருநாள் கூட நான் நினைத்தது இல்லை’ என்று திவ்ய பாரதி கூறியுள்ளார்.

* கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு அங்கம் தான். எல்லை மீறாத கவர்ச்சி நல்லது தான். இங்கு கவர்ச்சி என்பதை தவறாக பார்க்கும் கோணம் மாறிவிட்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். திருமணம் என்பது நடிகைகளின் வாழ்க்கையில் தடையாகி விடாது. திறமையை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. நல்ல புரிதல் இங்கு எல்லாவற்றையும் மாற்றிவிடும்’ என்று கூறியுள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

* தமிழ் ரசிகர்கள் எனது விருப்பத்திற்கு உரியவர்கள். அவர்களின் அன்புக்கு என்றுமே நான் கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பை காப்பாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார் மாளவிகா மனோஜ்.

* ஹாலிவுட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது அமைப்பின் உறுப்பினராக இணைவதற்கு இந்திய திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) ஸ்ரீகர் பிரசாத்துக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல மலையாள நடிகர் நஸ்லெனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* ‘பிளாஸ்ட்’, ‘எங்கள் தங்கம்’ என ஹீரோயின் ஆக்‌ஷன் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் தென்னிந்திய முன்னணி நடிகைகள் பலர் ஆக்‌ஷன் படங்களுக்கான கதைகளை கேட்டு வருகின்றனர். இதனால் ஆக்சன் ஹீரோக்களை போன்று ஆக்சன் ஹீரோயின்கள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது.

* துல்கர் சல்மானின் 41வது படம், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் அவரது தலைமுடியை வெட்டியுள்ளார். அது ஏதாவது படத்திற்கான கெட்டப்பா அல்லது சாதரண மாற்றமா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது புதிய ஹேர்ஸ்டைல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Tags : Ciny Mini News ,Dhanush ,Mammooti ,Sai Pallavi ,Srileela ,Rajkumar Peryasami ,Hollywood ,
× RELATED அங்கீகாரம் விமர்சனம்…