×

கான்சிட்டி விமர்சனம்…

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, மாஸ்டர் அகிலன். அவர்கள், கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு, பல்வேறு தொழில்களின் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். திடீரென்று போலீஸ் வலையில் சிக்குகின்றனர். அதிலிருந்து மீண்டார்களா என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். எமோஷனல், கமர்ஷியல், பேமிலி சென்டிமெண்ட் ஆகிய ஜானர்களில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பும், குரலும் அவர் தவறே செய்தாலும் ரசிக்க வைக்கிறது. இது அவருக்கு மறக்க முடியாத ஒரு படம். தொடர்ந்து ஹீரோவாக நடிக்கலாம். அன்னா பென் இயல்பாக நடித்துள்ளார். அவரது மகனாக வரும் மாஸ்டர் அகிலன், துடுக்குத்தனமாக நடித்துள்ளார்.

யோகி பாபு, வடிவுக்கரசி காம்பினேஷன் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. முழுநீள காமெடிக்கு அவர்களுடன் இணைந்து விடிவி கணேஷ், இமான் அண்ணாச்சி, அருள்தாஸ், ரகு, ‘அருவி’ மதன், லல்லு, சதானந்த் ஆகியோர் ஈடுகொடுத்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை ஓகே ரகம். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு ரசிக்கலாம். நீளமான வசனங்களை குறைத்திருக்க வேண்டும்.

Tags : Arjun Das ,Anna Ben ,Yogi Babu ,Vadivukkarasi ,Master Akilan ,Harish Durairaj ,Arjun Das’ ,
× RELATED விஜய்யுடன் மோத தயாராகும் கார்த்தி