×

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விது

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவன தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் ‘29’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விது, கார்த்திக் சுப்பராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘29’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், விதுவை ஹீரோவாக வைத்து மற்றொரு படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கிறார்.

இதை ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய வித்தியாசமான கதை கொண்ட படங்களை எழுதி இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் இயக்குகிறார். இவர் மணிகண்டனை வைத்து இயக்குவதாக இருந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், இதற்கிடையே கிடைத்த இடைவெளியில் விதுவை வைத்து புதிய படத்தை இயக்க ஆயத்தமாகியுள்ளார்.

Tags : Vidhu ,Karthik Subbaraj ,Rathna Kumar ,P.S. Vinoth Raj ,Manikandan ,
× RELATED அனந்தன் காடு விமர்சனம்…