×

உமாவுக்கு புற்றுநோய்

சென்னை: நடிகை சுமித்ராவின் மகளும் நடிகையுமான உமா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு: எனக்கு ஆரம்பக்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சி, மறுப்பு, நம்பமுடியாத நிலை எனப் பல உணர்வுகள். இதை ஜீரணிப்பதும் ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. ‘ஏன் எனக்கு? ஏன் இப்போது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?’ எனப் பல கேள்விகள் என் மனதை ஆக்கிரமித்தன.

என்னுடன் இணைந்து தைரியமாக இருந்த என் கணவருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்; என் மகனுக்கு அவனது மனவலிமைக்காக நன்றி; அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் தைரியமே என் தைரியமாகவும் மாறியுள்ளது என்றார்.

Tags : Uma ,Chennai ,Sumithra ,
× RELATED சாம் சி.எஸ்சின் லவ் யூ காட்டேரி