×

பிரான்ஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் சாதனை

லீ மான்ஸ்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற அணியை தொடங்கி, உலகம் முழுவதும் நடந்து வரும் கார் பந்தயங்களில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 30ம் தேதி அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்.

சில நாட்களிலேயே பிரான்சில் நடக்கும் ‘லீ மான்ஸ்’ கார் பந்தய தொடரில் பங்கேற்ற அஜித் குமார், 9 மற்றும் 13வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். பிரான்சிலுள்ள லீ மான்ஸ் நகரில் நடந்த இத்தொடரில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற புதிய சாதனையை அஜித் குமார் அணி படைத்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக முன்னேறுவோம் என்று அஜித் குமார் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags : Ajit Kumar ,France ,Lee Mann ,Ajit Kumar Racing ,Mohini Mani ,
× RELATED என்னை ஓரின சேர்க்கையாளர் என்று சொல்வதா? மவுனி ராய் ஆவேசம்