குறுகிய நேரத்தில் விறுவிறுப்பான கதைகளை வழங்கும் மொபைல் குறுந்திரை தொடர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஷேர்சாட் மற்றும் மோஜ் குவிக் டிவி தளம், ஜூன் மாதத்திற்கான புதிய தொடர் வரிசையை அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் பிரபலமான பல நடிகர்கள் இணைந்துள்ளனர். குடும்ப உறவுகள், பழிவாங்கும் கதைகள், காதல், மர்மம் மற்றும் ஆக்ஷன் கலந்த பல்வேறு கதைக்களங்கள் இந்தத் தொடர்களில் இடம்பெறுகின்றன.
இந்த வரிசையில் இடம்பெறும் ஒரு தொடரில், தன்னை ஏமாற்றியவர்களால் வாழ்க்கையை இழந்த ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்து உண்மையை கண்டறிய போராடுகிறார். மற்றொரு தொடரில், எதிர்காலத்திலிருந்து வரும் மர்மமான தொலைபேசி அழைப்பு ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பது சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.
இதேபோல், இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒருவர் தனது அடையாளத்தை மீட்டெடுக்க போராடும் கதை, சிறையில் இருந்து வெளியேறும் முன்னாள் ரவுடி தனது குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் வன்முறை உலகிற்குள் நுழையும் கதை.
