லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்ய, டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
படம் குறித்து ஜேசன் சஞ்சய் கூறுகையில், ‘இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. வரும் ஜூலை 31ம் தேதி ‘சிக்மா’ படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார்.
