×

மவுனி ராயின் விவாகரத்துக்கு திஷா பதானிதான் காரணம்: ரசிகர்கள் கடும் சாடல்

மும்பை: நடிகை மவுனி ராய், சுராஜ் நம்பியார் ஆகியோர், தங்களின் விவாகரத்து முடிவை கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடகங்கள் தேவையற்ற தலையீடு செய்வதை வருத்தத்துடன் கவனிக்கிறோம். நாங்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து மவுனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கருத்து பகுதியை (கமென்ட் செக்‌ஷன்) முடக்கி வைத்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், மவுனி ராயின் பழைய போட்டோக்களின் கீழே கருத்துகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக மவுனி ராயின் தோழியும், நடிகையுமான திஷா பதானிதான் இந்த திருமண முறிவுக்கு காரணம் என்று பலர் குற்றம்சாட்டியுள்ளனர். மவுனி ராய், சுராஜ் நம்பியாருக்கு இடையே திஷா பதானிதான் பிரச்னையை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கடுமையாக சாடுகின்றனர். ‘மவுனி ராய், சுராஜ் நம்பியாருக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டது திஷா பதானிதான்’ என்றும், ‘விவாகரத்துக்கு பிறகு திஷா பதானிதான் புதிய மனைவியா’ என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags : Disha Patani ,Mouni Roy ,Mumbai ,Suraj Nambiar ,
× RELATED கருப்பு விமர்சனம்…