×

பிரௌன் மணி படத்துக்கு லைவ் சவுண்ட்

சென்னை: ரிவர் ரூட் ஸ்டுடியோஸ், ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பிரௌன் மணி’. இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரியோ ராஜ் வெளியிட்டார். ராம் நிஷாந்த், ஜே.எஸ்.கவி நடித்துள்ளனர். கதிரவன் சம்பத் எழுதி இயக்கியுள்ளார். சக்தி சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, தேவ் பிரகாஷ் ரீகன் இசை அமைத்துள்ளார். எஸ்.சுந்தர் எடிட்டிங் செய்ய, அஃபர் அரங்கம் அமைத்துள்ளார்.

‘சிங்-சவுண்ட்’ முறையில் லைவ் சவுண்டுடன் உருவாகும் இப்படம், Soundaholics குழுவின் ஒலி தொழில்நுட்ப வடிவமைப்பில், இயல்பான மற்றும் ஆழமான ஒலி அனுபவத்தை வழங்குகிறது. ஜி.டி.கவின் இணை தயாரிப்பு செய்துள்ளார். ரியோ ராஜ், ரமேஷ் தயாரித்துள்ளனர். குடும்பம் மற்றும் நண்பர்களின் உறவை மையப்படுத்திய இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

Tags : Brown ,Chennai ,River Root Studios ,Red Rock Studios ,Rio Raj ,Ram Nishant ,J.S. Kavi ,Kathiravan Sampath ,Shakthi Subramanian ,Dev Prakash Regan ,S. Sundar ,Afar Arangam ,
× RELATED கணவரை பிரிந்து வாழும் நடிகை விநோத நோயால் கடும் பாதிப்பு