- மாலவிகா மனோஜ்
- ஜி.வி. பிரகாஷ்
- சென்னை
- ஜி.வி. பிரகாஷ் குமார்
- லார்க் ஸ்டுடியோஸ்
- பேரலல் யுனிவர்ஸ் படங்கள்
- ஹரிஹரன் ராம்
- தேனி ஈஸ்வர்
- மாளவிகா
சென்னை: லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது.
இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணியாற்றுகிறார். படத்துக்கு இசையமைத்து தயாரிப்பிலும் இணைந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடிக்கிறார்.

