×

தமிழ் புத்தாண்டில் புதிய படம் துவக்கம்

சென்னை: தமிழ் படவுலகின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதன் முதல் படத்தை தொடங்கியுள்ளது. அண்டர்டாக் கிரியேஷன்ஸ் என்ற அந்நிறுவனம் தனது முதல் படத்தின் பூஜையை, சென்னை வடபழனி முருகன் கோயில் அருகில் உள்ள அரங்கில் பாரம்பரிய முறையில் நடத்தியுள்ளது. அதியமான் அவினாஷ் எழுதி இயக்கும் இப்படத்தில் வினோத் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். மேலும் பல பிரபலங்கள் இணைய உள்ளனர்.

படத்தின் பூஜையை தொடர்ந்து, தமிழ் புத்தாண்டில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு வேலைகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தமிழ்பட உலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவிற்கு தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். விழாவின் இறுதியில் திடீரென பெய்த மழை, படத்துக்கு பாசிட்டிவ்வாக அமையும் என படக்குழுவினர் சிலாகித்து தெரிவித்தனர்.

Tags : Tamil New Year ,Chennai ,Underdog Creations ,Vadapalani Murugan Temple ,Adhiyaman Avinash ,Vinoth Kishan ,Balaji Sakthivel ,
× RELATED மீனவர்களின் வாழ்வை சொல்லும் தமிழினி