சென்னை: சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசு மேகதாது அணை, காவிரி விவகாரத்தில் அடைந்த தோல்வியை திசை திருப்பும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்ய முயற்சி செய்கிறது. சட்டமன்றம் நாளை (ஆக.04) கூட உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை பழிவாங்க அராஜகத்தை ஏவிவிட்டுள்ளார்கள். மிகவும் அயோக்கியத்தனமான செயல் இது என்றும் கூறினார்.
