தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்த கொடுமுடி காவிரி ஆறு

 

கொடுமுடி, ஆக. 4: தண்ணீர் வரத்து குறைவால் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஆடிப்பெருக்கு விழா நேற்று களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் எதிர்பார்த்த அளவில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, மகுடேஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்பாளை தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பெண்கள் காவிரி கரையில் மங்கள பொருட்களை வைத்து பூஜை செய்து குடும்ப நலன் மற்றும் வளமுடன் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததன் காரணமாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது.

Related Stories: