வளையல் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

 

திருப்பூர், ஆக. 3: திருப்பூர் காங்கயம் ரோடு நாச்சிபாளையம் அடுத்த தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் கோபித்துக் கொண்ட மனைவி அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது சுரேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த போலீசார் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: