அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

 

கிருஷ்ணகிரி, ஆக.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி 3வது வெள்ளியையொட்டி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயில் வளாகத்தில், ஆயிரக்கணக்கான தாமரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவலிங்க வடிவத்திலும், ஜோதி விநாயகர் கோயில் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் எலுமிச்சை அலங்காரத்திலும், ராயக்கோட்டை மேம்பாலம் பெரிய மாரியம்மன் கோயிலில் வளையல் அலங்காரத்திலும் அம்மன்கள் அருள்பாலித்தனர்.

 

Related Stories: