- முதல்வர்
- விஜய்
- டி.டிவி தீனகரன்
- சென்னை
- AMMK
- பொதுச்செயலர்
- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- தமிழ்நாடு, தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- கர்நாடகா அரசு
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை கைவிடுவதற்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை ராகுல் காந்தியிடம் நேரடியாக தெரிவிக்க தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை சட்டரீதியாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
