×

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான புரட்சியாக வெடிக்கும்: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார். திமுக தலைவரின் அரசியல் அனுபவம், வயது, வகித்த பதவிகள் ஆகியவற்றை அறிந்த பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டி பேச்சை தவிர்த்து,கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், பெயர் மாற்றங்களால் அல்ல; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே முடியும். விஜய் இங்கே வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் கூறுகிறார். அப்படி என்றால் இங்கிருந்து யாரவாது முதல்வர் விஜய் அங்கு வர இருப்பதாக தெரிவித்திருக்க வேண்டும்.

அதனால் தான் தற்போது வர வேண்டாம் என அந்த முதல்வர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் இப்படி மறைத்து மறைத்து பேச வேண்டிய அவசியம் என்ன.? இப்போதும் கள்ள மவுனம் காத்து வருகிறது இந்த அரசு. எல்லாவற்றிற்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்னை வெடிக்காது என நினைக்கின்றனர். ஆனால் அந்த அமைதியே ஒருகட்டத்தில் அரசிற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் புரசியாக வெடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Vijay ,Cauvery ,Former Minister ,Sivashankar ,Chennai ,Former ,DMK ,Minister ,Anna Arivalayam ,Nirmal Kumar ,
× RELATED சபரிவர்மன் கொலை வழக்கு எதிரொலி: நாகர்கோவில் சிறை அதிகாரி திடீர் மாற்றம்