×

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று: கர்நாடகாவில் அதிர்ச்சி தகவல்

 

பெங்களூர்: கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கல்லூரிகளில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்ற செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து, கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் மற்றும் அதன் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா ஆகியோர் ஒரு அதிகாரப்பூர்வ விளக்க வீடியோவையும் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

அதில், 7 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரிகளில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் பரவிய செய்திகள் பாதி மட்டுமே உண்மையானது. இதெல்லாம் ஒரே நேரத்தில் பரவிய வைரஸ் அல்ல. மொத்தமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்ட முடிவுகள். அதாவது. ஒரே நாளில் இத்தனை பேருக்கு எய்ட்ஸ் வரவில்லை.

மாறாக வேறு வேறு மாதங்களில், வேறு வேறு இடங்களில் பரவிய எய்ட்ஸ் பாதிப்புகள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் எச்ஐவி பரிசோதனை ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை. அது முற்றிலும் சுய விருப்பத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது’ என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Karnataka ,Bangalore ,
× RELATED காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்...