புதுடெல்லி: போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் சோட்டா ராஜனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நிழல் உலக தாதா சோட்டா ராஜன் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட்டுக்க விண்ணப்பித்துப் பெற்றதன் மூலமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சிபிஐ அதிகாரிகள் இது குறித்த விசாரணையை தொடங்கினார்கள். விஜயகதம் என்ற பெயரில் பாஸ்போர்ட்டுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. சோட்டா ராஜனுக்கு எதிராக 22 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்ற சோட்டா ராஜன் ஆயுள் தண்டனை பெற்று டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
