×

4.8 கி.மீ தூரத்திற்கு பிரமாண்டமாக உருவாக போகும் ‘கேட்வே ஆஃப் சென்னை’.!!

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரையிலான 4.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘கேட்வே ஆஃப் சென்னை’ என்ற புதிய பசுமை வழித்தட திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.10.50 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், சென்னை நகரத்திற்குள் நுழையும் போதே நினைவில் நிற்க கூடிய வகையிலான மற்றும் வரவேற்கும் விதமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி இந்த பொலிவூட்டும் திட்டத்தை செய்லபடுத்த உள்ளது.

சென்னை நகருக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் நமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம். முக்கியமாக இரவு நேரங்களில் ஒளிரும் அலங்கார மின்விளக்குகள், மக்கள் உட்கார பெஞ்சுகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதே போல இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் ஒருபகுதியாக பழைய கான்கிரீட் கட்டமைப்புகள், சேதமடைந்த நடைபாதைகள், தேவையற்ற செடிகள் மற்றும் நங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் முழுமையாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : Gateway ,Chennai ,Chennai Corporation ,Chennai International Airport ,Kathipara Flyover ,Chief Minister ,Integrated Urban Development… ,
× RELATED தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர்...