அன்னவாசல் அருகே புல்வயல் உலக நாயகி அம்மன் கோயில் புரவி எடுப்பு விழா

 

இலுப்பூர், ஜூலை 30: அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் உலக நாயகி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அன்னவாசல் அருகே உள்ள புல்வயலில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை யொட்டி பக்தர்கள் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புரவி எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் இந்தக் கோயிலில் திருவிழாயொட்டி புரவி எடுப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுற்றுப்பகுதியில் உள்ள 18 பட்டி பகுதி சேர்ந்த கிராம மக்கள் சுடு மண்ணால் செய்யப்பட்ட புரவிகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். புல்வயல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி புராதன நாடகம் நடைபெற்றது.

Related Stories: