சென்னை: குடும்ப தகராறில் சகோதரரை தாக்கிய வழக்கில், சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 12ம் தேதி மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது. இன்று மூன்றாவது முறையாக மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜராகி ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்படவில்லை.
