×

30ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் 30ம் தேதிவரை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஓரிரு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், மாலையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதேபோல் புதுக்கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-5° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tags : Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஆசிரியர்களின் மனுக்களுக்கு 5 நாட்களில் தீர்வு